ஒரே படத்தில் இணையப் போகும் 4 மாஸ் இயக்குநர்கள் : வெளியான செம அப்டேட்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்‘ படத்திற்குப் பின் இயக்குநர் விக்னேஷ் சிவன் யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்து அஜீத்தை வைத்து இயக்கப் போவதாக செய்திகள் வந்த நிலையில் பின்னர் அது புஸ்வானமானது. அதன்பின் விளம்பரப்படங்கள், தயாரிப்புப் பணி என பிஸியாகிய விக்னேஷ் சிவன் தோனியுடன் எடுத்த வீடியோ வைரல் ஆனது. தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார்.

கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கிய லவ் டுடே படம் இளைஞர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு மேல் வெற்றியைக் கொடுத்து நல்ல வசூலைக் கொடுத்த நிலையில் இவரின் அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்க்க தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை இயக்கவுள்ளார்.

ஏற்கனவே கோமாளி, லவ்டுடே படங்களில் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய திறமையை நிரூபித்திருந்தாலும் முதன் முதலாக வேறு இயக்குநருடன் பணிபுரிய உள்ளார். இந்நிலையில் இன்னும் தலைப்பிடப் படாத இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள  படங்கள் அனைத்தும் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வசூலிலும் நல்ல சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதனையடுத்து அவருக்காகவே கதைக்களங்களை உருவாக்கி டைரக்டர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டு வருகின்றனர்.

ஒரே வரியில் வாழ்த்தைச் சொன்ன விக்னேஷ் : அன்பில் உருகிப் போன நயன்தாரா

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளார். மேலும் அவருடன் டைரக்டர் மிஷ்கினும் நடிக்க உள்ளதால் விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மல்டி இயக்குநர்கள் படங்களும் வெளிவரத் துவங்கியுள்ளன. இதற்கு மாயாண்டி குடும்பத்தார் படம் ஓர் நல்ல உதாரணம். கிட்டத்தட்ட ஒரே படத்தில் 10 இயக்குநர்கள் சேர்ந்து நடித்த இப்படத்தை மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் இயக்கியிருந்தார். இந்தப்படம் விமர்சனத்திலும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews