தமிழகம்

காவல்துறையை தங்களுக்கு சாதகமாக ஸ்டாலின் அரசு பயன்படுத்திக் கொள்வதாக திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா குற்றம் சாட்டியுள்ளார்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது தேர்தலை ஒட்டி 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் பைபாஸ் சாலையில், லைசென்சும் இல்லாமல் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. பரப்புரையின் போது இந்தக் கடையைப் பார்த்த பாமக வேட்பாளர் திலகபாமா எஸ்.பி அலுவலகத்திற்கு போன் செய்தார். பின்னர் கடை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா, இன்று மது விற்பனை செய்யக் கூடாது என்று தெரிந்தும் இங்கு பாருடன் கூடிய விற்பனை நடைபெறுவது காவல்துறைக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார். ஐ.பெரியசாமியின் வீட்டிற்குப் பின்புறம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்று வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி.,க்கு போன் செய்தேன். ஆனால் ஸ்குவார்ட் அனுப்புகிறேன் என்றார். இப்போது வரை ஒரு நடவடிக்கையும் இல்லை எனக் குற்றம் சாட்டினார்.

காவல்துறையை தனக்கு சாதகமாக ஸ்டாலின் அரசு பயன்படுத்திக் கொள்கிறது என குறிப்பிட்ட திலகபாமா, இது காவல்துறையா இல்லை ஏவல் துறையா என்று கேள்வி எழுப்பினார். இதுபோல எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கடையை மூட வேண்டும் என்று குறிப்பிட்ட திலகபாமா பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பேட்டி : திலகபாமா, பாமக வேட்பாளர் திண்டுக்கல்

Published by
Staff

Recent Posts