வகை வகையான ஹேண்ட் பேக்குகள்… உங்ககிட்ட இதில் எத்தனை வகைகள் இருக்கு?

ஹேண்ட் பேக் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் அலமாரிகளில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொருள். என்னதான் பெண்களுக்கும் ஆடைகளிலேயே பாக்கெட் வைத்தது போல வடிவமைத்து உடைகள் சந்தைகளில் இருந்தாலும் அந்த பாக்கெட் பெண்களின் உடமைகளை வைப்பதற்கு போதாது. ஹேண்ட் பேக் என்பது பெண்களின் உடமைகளை வைத்துக் கொள்வதற்கு வசதியாக இருப்பதோடு தோற்றத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் வைத்திருக்கும் ஹேண்ட் பேக் அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் என கருதப்படுகிறது.

முன்பெல்லாம் ஹேண்ட் பேக் என்றாலே கையில் குடையுடன் ஆசிரியை ஒருவர் ஹேண்ட் பேக் சுமந்து செல்லும் காட்சி ஞாபகம் வரும். ஆனால் ஹேண்ட் பேக் என்பது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டும் இன்றி இல்லத்தரசிகளுக்கு, கல்லூரி பெண்களுக்கு, ஏன் சிறுமிகள் கூட உடைக்கு தகுந்தார் போல் இப்பொழுது ஹேண்ட் பேக்கையும் தேர்வு செய்து கொள்கிறார்கள்.

இந்த ஹேண்ட்பேக்குகள் பல வகைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது அவற்றுள் சில வகைகளை மட்டும் நாம் பார்க்கலாம்.

1. சோல்டர் பேக்:

shoulder bag

சோல்டர் பேக் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஒரு கைப்பையாகும். பர்ஸ், போன், வாட்டர் பாட்டில், கொரிப்பதற்கு சில உணவுப் பொருட்கள், மேக்கப் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் சுமந்து செல்வதற்கு வசதியான பையாக இருக்கும். இந்த சோல்டர் பேக்கிலேயே பல வடிவங்களில் பல பிராண்டுகளில் கிடைக்கிறது. உடைக்குத் தகுந்தார் போல் நிறத்தையும், பிளைனாகவோ அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட டிசைனையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

2. சாச்சல் பை (satchel bag):

satchel

சாச்சல் வகை பேக் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் வசதியான பை ஆகும். லேப்டாப், டேப்லெட், மொபைல், சார்ஜர்கள் போன்ற சாதனங்களை வைக்கக் கூடிய வகையில் வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சாச்சல் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது ஹேண்ட் பேக், லேப்டாப் பை என்று தனித்தனியாக சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த வகையான கைப்பைகளிலும் பலவிதமான வடிவமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. ஸ்லிங் பேக்:

sling bag

இதுவும் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த பையாகும். ஷாப்பிங் செல்கையில் அல்லது பயணத்தின் போது வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். மொபைல் பர்ஸ் கார்டு போன்ற அத்தியாவசியமான பொருட்களை சுமந்து செல்ல உகந்தது. இந்த ஸ்லிங் பேக்கும் பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற ஹேண்ட் பேக்குகளை போல் அல்லாமல் இதில் உள்ள நீளமான ஸ்ட்ராப்புகள் உடலில் குறுக்காக அணிந்து கொள்ள வசதியாக இருக்கும். எனவே ஹேண்ட் பேக் சுமந்து செல்வதே தெரியாது.

4. பீச் பேக்:

beach bag

கடற்கரைப் பகுதிகளுக்கு அல்லது வேறு எங்கேயும் பிக்னிக் செல்ல விரும்புவோருக்கு இந்த பீச் பேக் மிகவும் சரியான தேர்வு. இது வாட்டர் ப்ரூப் ஆக இருப்பதால் தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. பிக்னிக்கிற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இதனுள் அடக்கி விடலாம். இளம் தாய்மாராக இருந்தால் உங்கள் குழந்தைக்கான டயாபர் பேக்காவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவை மட்டுமின்றி இன்னும் பலவிதமான ஹேண்ட் பேக்குகள் இருக்கிறது. ஹேண்ட் பேக்களின் விலை நூறுகளில் தொடங்கி சில பிராண்டுகளின் ஹேண்ட் பேக்குகள் விலை லட்சங்கள் வரை உள்ளது. எப்பொழுதும் நல்ல தரமான ஹேண்ட் பேக்குகளில் உங்களது பணத்தினை முதலீடு செய்வதன் மூலம் அடிக்கடி பைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அவை நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews