கடைசி நேரம் வரை போராடும் சிவகார்த்திகேயன்!.. திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா அயலான்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்போவதாக இருந்த நிலையில் தற்போது கடைசி நேரத்தில் படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் கிளம்பி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் இப்படம் ஏலியனை வைத்து வித்தியாசமான கதையாக உருவாக்க்கியிருக்கிறது. ஆர். ரவிகுமார் இயக்கிய அறிவியல் புனைவுகதை நாடகமான அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஏலியனுக்கு டப்பிங் பேசியுள்ளார் சிந்தார்த்.

அயலான் திட்டமிட்டப்படி வெளியாகுமா?

ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும் சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வதகவும் , டைனோசர் போன்ற உயிரினங்களின் முட்டைகளையும் கண்டுபிடித்தாகவும் , ஒரு பெரிய விண்கலம் பூமியில் தரையிறங்கி ஒரு வேற்றுகிரகவாசி அதிலிருந்து வெளியேறுவதாகவும், விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியில் இருக்கும் போது, சிவகார்த்திகேயனும் அவரது நண்பர்களும் அதனுடன் நட்பு கொண்டு அதை தங்கள் வீட்டில் வைத்துகொண்டு விஞ்ஞானிகளிடமிருந்து காப்பாற்றுவது கதைகளமாக அமைந்துள்ளது என்கின்றனர். ஹாலிவுட்டில் வெளியான பால் படத்தின் தழுவல் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மக்கள் மத்தியியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல அயலான் படமும் ட்ரைலரிலேயே பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் இடையே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் பேசிய சிவகார்த்திகேயன், ஒரு ஏலியன் நம் வாழ்க்கையில் வந்தால் எப்படி இருக்கும் , ரவிக்குமார் கதை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இது போன்ற படம் எடுக்க நிறைய பொறுமை வேண்டும். படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டே முடித்ததாகவும், ஆனால் கொரோனாவால் சிஜி வேலையை துவங்க முடியவில்லை. மேலும் நிதி பிரச்சனையும் ஏற்பட்டதால் படத்தை வெளியிட தாமதமாகிவிட்டது என்றார்.

தீவிர முயற்சியில் சிவகார்த்திகேயன்:

என்னுடைய தயாரிப்பாளர்கள் நஷ்டப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் அதற்காக நான் புதுப்புது முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்துக்கு தான் சம்பளமும் வாங்கவில்லை என்றார்.

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் அயலான் படத்திர்க்காக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக வாங்கியிருந்தது. அதை பொறுப்பேற்றுக் கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், 3 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளது. மீதக் கடனை கொடுக்காததால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

பைனான்ஸ் பிரச்சினைகள் முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்ட நிலையில் இன்னும் முடியவில்லை என்றும் பைனான்ஸால் படத்தின் ரீலிஸே நிற்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், சிவகார்த்திகேயனே அந்த சிக்கலை சரி செய்து படத்தை ரீலிஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை நாளை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என கடைசி வரை சிவகார்த்திகேயன் போராடி வருவதாகவும் 2 வழக்குகளில் ஒரு வழக்கு தீர்ந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...