டாஸ் ஜெயித்த தல தோனி.. பயமுறுத்தும் மழை.. நடராஜன் இன்று விளையாடவில்லையா?

ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டி இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை தேர்ர்வு செய்து உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் ஹைதராபாத் அணி களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மிகவும் பரபரப்புடன் நடைபெறும் என்றும் இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் மைதானத்தில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியலை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் அதில் மூன்றில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஐதராபாத் அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் போட்டியை மழை பாதிக்குமா என்ற பயமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணியின் இன்று விளையாடும் வீரர்கள் குறித்த தகவல்கள் இதோ:

சென்னை அணி: கான்வே, ருத்ராஜ், ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, ஆகாஷ் சிங்

ஐதராபாத்; புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்கம், அபிஷேக் சர்மா, க்ளாசன், ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ் குமார், உம்ரான் மாலிக்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...