திடீரென டிரெண்ட் ஆகும் தோனி ஹேஷ்டேக்.. என்ன காரணம்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 43 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி குறைந்தபட்சம் 260 அல்லது 270 ரன்கள் அடித்தால் மட்டுமே ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தற்போது ஷமி மற்றும் சூரியகுமார் யாதவ் விளையாடி வரும் நிலையில் இவர்களில் சூரியகுமார் யாதவ் கடைசி வரை விளையாட வேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.

இந்த நிலையில் ரோகித் சர்மா இன்று ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி 47வது ரன்னில் அவுட் ஆனார். இதனை அடுத்து அவர் நூலிழையில் அரைசதத்தை மட்டுமல்ல தோனியின் சாதனையையும் முறியடிக்க தவறிவிட்டார்.

இதுவரை உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன்களில் 50 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி வைத்துள்ளார். ரோகித் சர்மா இன்று 50 ரன்கள் அடித்திருந்தால் அந்த சாதனையுடன் சமனாக இருப்பார். ஆனால் அவர் 47 ரன்னில் அவுட் ஆனதால் இன்னும் உலககோப்பை இறுதி போட்டியில் 50 ரன்கள் அடித்த ஒரே கேப்டன் தோனி என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இன்று ட்விட்டரில் தோனி என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.