ஜாதகத்தில் தசாபுத்தியே முக்கியமானது

குருப்பெயர்ச்சி வந்து விட்டால் போதும், சனிப்பெயர்ச்சி வந்துவிட்டால் போதும் பலரும் பல்வேறு யூ டியூப் சேனல்களை பார்த்து குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வதும், மேலும் பல குருபெயர்ச்சி புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்து கொள்வதும் தொடர்கிறது.

இது போல் ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி காலங்களில் தங்களுக்கு என்ன பலன் என பார்த்து தெரிந்து கொள்ளவும், குறிப்பிட்ட கோவில் பரிகாரஸ்தலம் என்றால் அந்த கோவிலுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி காலங்களில் நமது ராசிக்கு ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி பெரிதும் சந்தோசப்படுவதோ, கவலைப்படுவதோ வேலைக்கு ஆகாது.

ஒருவரின் பிறந்த ஜாதகமே ஒருவரின் உயர்வு தாழ்வுகளை சித்தரிக்கிறது. பிறந்த ஜாதகத்தில் வரும் தசாபுத்தியே ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மற்றும் தீய மாற்றங்களை சொல்கிறது.

இதனால் ஜாதகத்தில் ஒருவரின் தசாபுத்திதான் மிக முக்கியமானது. மற்றபடி குருப்பெயர்ச்சி பலன்கள் போன்றவை சிறு வழிகாட்டுதலுக்கு மட்டும்தான். அதையே முழுவதும் நம்பி இருக்க அவசியமில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews