தனுசு குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு 5 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் பார்வை பார்ப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு பெற்றோரின் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில்ரீதியாக பல சிக்கல்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம்ரீதியாக அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்கியம் குறித்த விஷயத்தில் அனுகூலம் ஏற்படும்.

பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குல தெய்வக் கோவிலுக்குச் செல்ல முடியாமல் பல தடங்கல்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

தொழிலில் நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள். அசையும், அசையாப் பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நீங்கள் கொண்டிருந்த வீடு கட்டுதல் /வாங்குதல் போன்ற ஆசையானது நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும், குடும்ப உறுப்பினர்களிடத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி கோபத்தினைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்.

பிள்ளைகளுக்கு சிறப்பான வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். கடன்கள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் அனைத்தும் சுபச் செலவுகளாகவே இருக்கும்.

திருமண காரியங்கள் கைகூடாமல் தள்ளிப் போனால் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்குச் சென்று வருதல் நன்மை பயக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.