ஜோதிடம்

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்… கடன் பிரச்சினைகள் தீரும்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசிக்கு ராசி அதிபதியும் நான்காம் இடத்திற்கு அதிபதியும் குரு பகவான் தான். இதனால் தனுசு ராசி அன்பர்கள் எந்த ஒரு செயலையும் முடிக்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவ்வளவு காலம் குரு பகவான் தனுசு ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்தார். இந்த காலகட்டத்தில் வெற்றிகள், தன வரவுகள் என பல நன்மைகள் நடந்திருந்தாலும் கடந்த டிசம்பர் மாதம் வரை சனிபகவான் ஏழரை சனியாக இருந்ததால் இந்த நன்மைகளால் திருப்தி அடைந்திருக்க மாட்டீர்கள்.

இந்த நிலையில் குரு பெயர்ச்சியாகி ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு செல்கிறார். ஜென்மஸ்தானத்திற்கு அதிபதியான குரு ஆறாம் இடத்திற்கு வருவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். வருமானம் அதிகரிக்கும்.

அதேபோன்று நான்காம் இடத்திற்கு அதிபதியான குரு ஆறாம் இடத்திற்கு செல்வதால் எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும். சொந்த வீட்டில் குடியேறுவீர்கள், நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த கடன்கள் தீரும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவுக்கு வரும்.

குரு பகவான் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே இருக்கும் அவ்வகையில் குரு பகவானின் நேர் பார்வை தனுசு ராசியின் 12-ம் இடத்தில் விழுகிறது இதனால் தேவையற்ற செலவுகள் குறைந்து விடும். பணியாளர்களிடம் இருந்து வந்த பிரச்சனை தீரும்.

அதேபோன்று குருவின் ஐந்தாம் பார்வை தனுசு ராசியின் பத்தாம் இடத்தில் விழும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை மாறும். அதோடு குரு பகவானின் ஒன்பதாவது பார்வை தனுசு ராசியின் இரண்டாவது இடத்தில் விழும்போது எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும்.

குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். கூடுதல் பலன்களைப் பெற அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தும் மிளகு சாதம் நெய் வைத்தியமாக வைத்தும் வழிபாடு செய்வது சிறப்பு.

Published by
Staff

Recent Posts