தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2022!

2 ஆம் இடத்தில் சனி பகவான், 4 ஆம் இடத்தில் குரு பகவான், 6 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான், 5 ஆம் இடத்தில் ராகு பகவான், 11 ஆம் இடத்தில் கேது பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

சூர்யன்-சுக்கிரன்-புதன் என கோள்கள் இணைந்து தனுசு ராசியிலேயே உள்ளதால் நேரவிருக்கும் கேடுகளும் தகர்ந்து போகும் . குரு பகவான் அம்ச யோகத்தில் உள்ளார்.

ஆன்மிகப் பயணங்கள் குடும்பத்துடன் செய்வீர்கள். வேலைவாய்ப்புரீதியாக நினைத்த விஷயங்களை தடைகள் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொழில்ரீதியாக பணவரவு சிறப்பாக இருக்கும். வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப செலவுகள் ஏற்படும்.

மேலும் வேலைவாய்ப்புரீதியாக இடமாற்றத்திற்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நிச்சயம் நினைத்த காரியம் ஈடேறும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் சனி பகவானின் இடப் பெயர்வால் குறையும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சனி பகவானின் இடையூறால் தடங்கல்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே அன்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கள். எதிர்காலத் திட்டங்கள் குறித்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். உடல் ஆரோக்கியம்ரீதியாக உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.