கதை நல்லா இல்லன்னு நிராகரித்த தனுஷ்.. அட அந்தப் படமா.. அது வேற லெவல் ஹிட்டாச்சே..!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் தனுஷ். தமிழ் சினிமாவில் நடிகர், எழுத்தாளர், பாடகர் பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என இவர் பயணிக்காத துறையே கிடையாது. மாநிறம், நடுத்தர உயரம் என பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல் இவரது தோற்றம் இருந்ததால் மக்களிடையே வெகு விரைவிலேயே எளிதாக சென்றடைந்தார். அதனை பிடித்துக் கொண்டு தன்னுடைய தனி திறமையின் மூலம் படிப்படியாக உயர்ந்து ஹாலிவுட் வரை சென்றார்.

இன்று இவர் நடித்த படங்கள் மக்களிடையே எளிதாக சென்று அடைந்தாலும் ஆரம்ப காலங்களில் இவரது படங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க தவறியது. காதல் கொண்டேன் படம் ஓரளவுக்கு இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் மக்களிடையே அவரது முகம் பெரிதளவில் சென்றடையவில்லை.

அக்காலக் கட்டத்தில் ஹீரோவை மையப்படுத்தி வரும் கதைகளை மட்டுமே நம்பி இருந்தார். அதனால் பல நல்ல படங்களை நிராகரித்துள்ளார். அதில் ஒரு படம்தான் ‘காதல்’. 2004ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகிய படம்.

இப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் கேரக்டரில் பரத் மற்றும் சந்தியா ஆகியோர் நடித்திருப்பர். இப்படத்திற்கு பின் சந்தியாவை அனைவரும் காதல் சந்தியா என்றே அழைத்தனர். அந்த அளவிற்கு இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. படத்தில் பைக் மெக்கானிக்காக பரத் நடித்திருப்பார். பரத்திற்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பணக்காரப் பெண் சந்தியாவிற்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

பின் இருவரும் வீட்டை விட்டு ஓடி படும் கஷ்டத்தை எதார்த்த வாழ்வியலை விவரிக்க கூடிய கதையாக இருக்கும். இப்படத்திற்காக முதலில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனுஷிற்க்கு தான் கதை சொல்லி இருக்கிறார். கதையை கேட்ட தனுஷ், ‘கதை நல்லா இல்லை, நான் பண்ணா சரியா இருக்காது’ என்று நிராகரித்துள்ளார். இந்த தகவலை மறைந்த நடிகர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒருவேளை தனுஷ் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் அவரது சினிமா கேரியரில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews