இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்… பியோபிக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…

இசைஞானி இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். இவர் இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்று ஜாம்பவானாக திகழ்பவர். இவரது இசையில் உருகாத மனங்களே இல்லை என்று சொல்லலாம்.

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார். இதுவரை 1000 த்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரின் படைப்புகளுக்காக இந்திய அரசு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ‘பத்மபூஷன்’ விருது அளித்து கவுரவப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் பியோபிக் படமொன்றில் நடிக்கவிருப்பதாக நீண்ட நாட்களாக தகவல் பரவி வந்தது. தற்போது அதை உறுதி படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் இளையராஜாவின் பியோபிக் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார்.

இந்த பியோபிக் திரைப்படத்திற்கு ‘இளையராஜா’ என்றே பெயரிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த பியோபிக் படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா அவர்களே இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் பூஜை மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாய் நடந்தது. படத்தின் துவக்க விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆகியவர்களை தவிர்த்து இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமலஹாசன், கங்கை அமரன், சந்தானபாரதி, ஆர். வி. உதயகுமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...