தோட்டா தெறிக்க தெறிக்க!.. ரியல் டெவிலாக வரும் தனுஷ்.. கேப்டன் மில்லர் டிரெய்லர் இதோ!

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. வசந்த் ரவி நடித்த ராக்கி, கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடித்த சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.

கேப்டன் மில்லர் டிரெய்லர் ரிலீஸ்:

ஆங்கிலேயர்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே நடக்கும் கிளர்ச்சியாகவே இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் கேப்டன் மில்லராக ஒவ்வொரு சீனிலும் வெறித்தனத்தின் உச்சத்தை முகத்தில் காட்டி நடித்துள்ளார். அசுரன் படத்தில் அருவாளை எடுத்துக்கொண்டு எப்படி வெட்டி வீசுவாறோ அதேபோல இந்த படத்தில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு பலரை சுட்டுக் கொள்கிறார்.

தனுஷை தாண்டி கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லர் முழுக்கவே துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. யாராவது யாரையாவது சுட்டுக் கொன்று கொண்டே இருக்கும் காட்சிகளை மட்டுமே டிரைலரில் இடம் பெற செய்ய வேண்டும் என இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உறுதியாக இருந்திருப்பது தெளிவாக தெரிகிறது. பின்னணியில் அதற்கு ஏற்றவாறு வெடி சத்தத்தை அதிக அளவில் பயன்படுத்தி ஹெட்செட் மாட்டி ட்ரைலர் பார்த்தவர்களின் காதுகளை பதம் பார்க்க வைக்கும் அளவுக்கு ஜிவி பிரகாஷ் குமார் தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

குண்டு முழக்கம்:

வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிம்மிஷா சஜயன் நடித்துள்ள மிஷன் 1, விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோல தெலுங்கில், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ஹனுமன் மற்றும் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.

வரும் பொங்கலுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் இருக்கும் என்றே தெரிகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் தமிழில் மற்ற படங்களை தூக்கி சாப்பிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...