ஏகே 63 படத்தில் இணைந்த புஷ்பா பிரபலம்!.. வேறலெவல் காம்பினேஷனா இருக்கே!..

விடாமுயற்சி படத்தை அடுத்து நடிகர் அஜித் குமாரின் 63வது படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும், அஜித்தின் ஏகே 63 படத்தில் டோலிவுட் பிரபலம் இணையப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கதில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் லைகா புரொடக்ஷனிலும், அனிருத் இசையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும், விடாமுயற்சி ஒரு ஆக்ஷன் திரில்லராக மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 63 படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்:

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை அள்ளியது. மார்க் ஆண்டனி படத்தை விட அஜித்தின் 63வது படத்திற்க்கு ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் இருந்து வரும் நிலையில், முதல்முறையாக அஜித்துடன் இணைந்து ஏகே 63 படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளது . எனவே, இந்தப் படத்துக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

அஜித்தின் ஏகே 63 படத்தில் டோலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் தேவிஸ்ரீ பிரசாத், தற்போது அஜித் படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ், தேவிஸ்ரீ பிரசாத் என டோலிவுட் கூட்டணியுடன் ஏகே 63 படத்திற்க்காக இணைந்துள்ளார் அஜித். புஷ்பா படத்தில் தாறுமாறாக பாடல்களை போட்ட தேவிஸ்ரீ பிரசாத் அஜித் படத்துக்கும் அட்டகாசமான இசையை கொடுப்பார் என தெரிகிறது.

மேலும் ஏகே 63 படத்தின் பூஜை பொங்கல் தினத்தன்று சென்னையில் சிம்பிளாக படக்குழுவினர் மட்டுமே வைத்து நடைபெற்றதாக கூறுகின்றனர். இந்நிலையில், ஏகே 63 படத்தின் படபிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு மற்றும் விடாமுயற்சி படத்திற்கு இடையே அதிக இடைவேளை இருந்ததால் விரைவாக அடுத்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் அஜித். மேலும், விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை அஜித் துவங்கவுள்ளதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே அஜித்தின் வீரம் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த பாடல்கள் ஹிட் கொடுத்த நிலையில் இப்படத்திலும் இவர்களின் காம்பினேஷன் பிளாக் பஸ்டர் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.