AK 63 மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் தற்போது விடா முயற்சி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட த்ரில்லர் ஆக்சன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அஜீத்துடன் இணைத்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அஜீத்துடன் த்ரிஷா, அர்ஜூன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மே மாதம் அஜீத்தின் பிறந்த நாள் அன்று படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசைமைத்து வருகிறார். வேதாளம், விவேகம் படத்திற்குப் பிறகு அஜீத்துடன் இப்படத்தில் கைகோர்க்கிறார் அனிருத்.

இந்நிலையில், AK 63படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்திற்குப் பின் மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இணைய உள்ளார் அஜீத். இப்படத்திற்கான பூஜைகள் அண்மையில் போடப்பட்டன. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

மிரள வைக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா குறுகிய காலத்திலேயே இவ்வளவு கோடிகளா?

‘ரங்கஸ்தலம்’, ‘சர்கார்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய பிரபல டோலிவுட் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும் தற்போது இந்த டீமுடன் இன்னொரு டோலிவுட் பிரபலமும் இணைந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும், தமிழில் பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தவருமான தேவி ஸ்ரீ பிரசாத் இணைய உள்ளார்.

ஏற்கனவே வீரம் படத்தில் ஹிட் பாடல்களையும், தரமான பின்னணி இசையையும் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது அஜீத்துடன் மீண்டும் இணைய உள்ளார். இதனால் AK63 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் வெற்றியைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் AK63-லும் அஜீத்துக்கு காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ரத்னம் படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews