செய்திகள்

ரேப்பிட்டோ, ஓலா, உபர் நிறுவனங்களுக்கு ஆப்பு; பைக் டாக்சி சேவைக்கு தடை விதிப்பு!

ரேப்பிட்டோ, ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ, காரைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றனர். இந்த சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.

மேலும் முறையான உரிமம் இன்றியும், சாலை விதிகளை மதிக்காமலும் பலரும் பைக் டாக்ஸி சேவையில் பணிபுரிந்து வருவதாக புகார்கள் எழுந்தன.இந்நிலையில் டெல்லியில் பைக் டாக்சி நடத்துபவர்களுக்கு பெரும் அடியாக, டெல்லி சாலைகளில் வணிக ரீதியிலான பைக் டாக்ஸி சேவைகளை வழங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும் என்றும், இது திரட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக விதியை மீறினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறையாக விதி மீறல்களில் ஈடுபட்டால் ரூ. 10,000 அபராதம் மற்றும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி பைக் டாக்சி ஓட்டும் ஓட்டுநரின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Amaravathi

Recent Posts