தீபாவளி கங்கா ஸ்நானம் விளக்கம்

தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து விட வேண்டும். எழுந்து சூரிய உதயத்திற்கு முன்னரே அதாவது 4 மணி முதல் 5மணிக்குள்  ஸ்னானம் செய்ய வேண்டும். அதாவது கங்கையில் எடுத்து வந்த நீர் இருந்தால்  சிறிதளவு நாம் தண்ணீரில் ஊற்றிக்கொள்ளலாம்.

பொதுவாக தீபாவளிக்காலங்களில் மழை பெய்யும் இதனால் பொதுவாக பலரும் அதிகாலை நேரம் என்பதால் வெந்நீரில் குளிப்பார்கள்.

தீபாவளி ஸ்னானம் நல்லெண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டும் நல்லெண்ணெய் குளிர்ச்சியானது அதிகாலை குளிர் நேரத்தில் நல்லெண்ணெய் தேய்த்து  பச்சை தண்ணீரில் குளித்தால் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வரும் இவற்றை தவிர்க்கும் பொருட்டு அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இத்தகைய நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

குளிக்கும் நீரில் கொஞ்சம், சந்தனம். மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை லேசாக தூவி குளிக்கலாம்.

குளித்து முடித்து விட்டு என்னை சுற்றியுள்ள தீமைகள் அனைத்தும் விலகி எனக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews