தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..

அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் தீவிர பற்றாளராக இருந்த காலகட்டம் அது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவர்களின் வழியில் அரசியல் பயணத்தினை தொடர்ந்து கொண்டிருந்தார் எம்.ஜி.அர். அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பால தண்டாயுதம் பல மேடைகளில் எம்.ஜி.ஆரை மிகவும் விமர்சித்துப் பேசி வந்தார்.

ஏனெனில் எம்.ஜி.ஆர் அப்போது நடிகராகவும்,திமுக தலைவர்களில் முக்கியமானவராகவும் விளங்கினார். அறிஞர் அண்ணா சொன்னது போல் எம்.ஜி.ஆர் தன் முகத்தைக் காட்டினாலே 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பாராட்டுப் பெற்றவர். அந்த அளவிற்கு திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் எம்.ஜி.ஆர்.

மேலும் இவ்வாறு திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் எம்.ஜி.ஆரை விமர்சிப்பதன் மூலமாக திமுகவினை பலவீனப்படுத்தி விடலாம் என்பது கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதத்தின் கணக்கு. சொன்னது போலவே எம்.ஜி.ஆரை வசை பாடி மேடைகளில் பேசி வந்தார் பாலதண்டாயுதம்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரான ஜீவாவின் மேல் அளவற்ற பற்று கொண்டிருந்தார் பாலதண்டாயுதம். மேலும் ஜீவாவும் அனைத்து கட்சியினரிடமும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இந்நிலையில் ஜீவாவின் மரணத்திற்குப் பின் அவருக்குச் சிலை எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது. அப்போது நிதி திரட்டும் பணியில் பாலதண்டாயுதம் மேற்கொண்டிருக்க ஓரளவிற்கு நிதியும் சேர்ந்தது.

நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்

இந்நிலையில் பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. எம்.ஜி.ஆரிடமும் சென்று நிதி கேட்கலாமா என்று. உடனே எம்.ஜி.ஆரைப் பார்க்க கிளம்பினார் பால தண்டாயுதம். எம்.ஜி.ஆர் அவரை இன்முதத்துடன் வரவேற்க வந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் பாலதண்டாயுதம். உடனே எம்.ஜி.ஆர் மகிழ்ந்து சிலை வைப்பதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டு மொத்தத் தொகையையும் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். மேலும் எனக்கும் கம்யூனிசக் கொள்கைகள் பிடிக்கும். எனது படங்களின் மூலமாக அதை வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கையில் உடன்பாடு உள்ளது என்று கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாது அவரின் மேடைப் பேச்சையும் பாராட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். இவ்வாறு கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்த பாலதண்டாயுதம் தான் மேடையில் இவரை அவ்வளவு விமர்சித்துப் பேசியும் அதனைப் பொருட்படுத்தமாமல் எம்.ஜி.ஆரின் உயர்ந்த உள்ளத்தினைக் கண்டு நெகிழ்ந்து போனார். மேலும் எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்த போது அவருக்காக கம்யூனிஸிட் கட்சி சார்பில் ஆதரவுக் கரம் நீட்டி எம்.ஜி.ஆரை பாராட்டிப் பேசினார். இவ்வாறு தன்னை விமர்சித்தவரையும், பாராட்டிப் பேச வைத்த குணம் படைத்தவராக விளங்கியுள்ளார் மக்கள் திலகம்.

Published by
John

Recent Posts