விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச ரவி மரியா இந்த பிரபல நடிகர் படத்தை இயக்குனவரா.. இத்தன நாள் இது தெரியாம போச்சே..

 

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகரான ரவி மரியா, ஒரு பக்கம் சில வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரது காமெடி நடிகர் கதாபாத்திரம் மிக பிரபலம். விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் காமெடி காட்சிகளில் நடித்துள்ள ரவி மரியாவுக்கான ரசிகர்கள் கூட்டமும் ஏராளம். குறிப்பாக ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் ரோபோ ஷங்கருடன் பழைய நினைவுகளை மறந்த பிறகு அவர் உரையாடும் காட்சிகள் இன்றும் நினைத்தாலே சிரிப்பை வரவைக்கும்.

அதேபோல, சிவகார்த்திகேயனின் மனம்கொத்தி பறவை படத்தில் ரவி மரியா நடித்திருந்த கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நிறைய பாராட்டுகளை பெற்றிருந்தது. இத்தகைய காமெடி காட்சிகளில் நடித்தவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. விஜய் நடித்த குஷி என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் ரவி மரியா. மேலும் இந்த படத்தில் அவர் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ஜீவா நடித்த ’ஆசை ஆசையாய்’ என்ற படத்தின் மூலம் ரவிமரியா இயக்குநர் ஆனார். மேலும் அந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் அவர் நடித்திருப்பார். இதன் பிறகு ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

’ஆசை ஆசையாய்’ திரைப்படத்திற்கு பிறகு நட்டி (எ) நடராஜன் சுப்பிரமணியம் நடித்த ’மிளகா’ என்ற திரைப்படத்தையும் ரவி மரியா இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அஜித்தின் ’ஆழ்வார்’ என்ற திரைப்படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார். இது தவிர சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’சண்ட’ படத்திற்கும் அவர் தான் வசனம் எழுதி இருப்பார்.

காமெடி நடிகர், உதவி இயக்குனர், இயக்குனர், கதை, வசனம் எழுதியவர் என பல்வேறு கலை திறமைகள் கொண்டவர் தான் ரவி மரியா, ஒரு கேரக்டரை ஏற்றுக் கொண்டால் அந்த கேரக்டராகவே அவர் மாறிவிடும் தன்மை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவிமரியா தற்போதும் கூட தமிழ் திரை உலகில் பிஸியான காமெடி நடிகராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவர் உன்னால் என்னால்,  சான்றிதழ், தமிழ் குடிமகன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் அவர் ராதிகாவின் உறவினராக நடித்திருந்த காட்சிகள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

நடிகர் ரவிமரியா இன்னும் பல வாய்ப்புகளை பெற்று ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. மேலும் இயக்கம் மற்றும் கதை வசனம் உள்ளிட்ட துறைகளிலும் அவர் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.