இவர் படத்துல எல்லா கேரக்டர்களும் புகுந்து விளையாடும்… அதான் சூப்பர்ஹிட்டாகுது…. யாரைச் சொல்கிறார் இளவரசு?

நகைச்சுவை நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக மாறிய இளவரசு வட்டார பாஷைகளில் பேசி கலகலப்பூட்டுபவர். இவர் நடிக்கும் போது நம்மையும் அறியாமல் நமக்கு சிரிப்பு வந்து விடும். ஆனால் வசனம் பேசும் இவர் சிரிக்க மாட்டார். இவரது திரை உலக அனுபவங்களைப் பற்றி இவர் சொல்லக் கேட்போமா…

ஹீரோ, ஹீரோயின் அப்பா கேரக்டர் என்றால் அவர் இளவரசு தான். அப்பா கேரக்டரை நான் தேடிப் போகவில்லை. அதுவாகவே வருது. எப்பவுமே ஹீரோயின் அப்பாவாக இருந்தால் பாய்ஸ்சுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஹீரோயின் அப்பா வந்து எப்பவுமே முட்டாளாவே இருக்கணும். எதிர்த்து கேள்வி கேட்டுறக் கூடாது. அவன் செவர் ஏறிக் குதிச்சா அந்தப் பக்கம் திரும்பிப் பாட்டுப் பாடணும். அப்புறம் இங்கக் குனிஞ்சிக்கிட்டு இருக்கணும்.

இந்தப் பக்கம் நடந்து போயி பொண்ணக் கூட்டிட்டுப் போவாரு. பேசாம இருக்கணும். இதெல்லாம் தானே உங்களுக்குப் பிடிச்ச அப்பா. ஹீரோயின் அப்பான்னா அப்படி இருக்கணும். இல்லேன்னா துப்பாக்கியை வச்சி சுட வரணும். ஆனா இதெல்லாம் இந்தப் படத்துல கிடையாது. அது தான் எதற்கும் துணிந்தவன்.

23rd Pulikesi
23rd Pulikesi

டைரக்டர் பாண்டிராஜ். 23ம் புலிகேசில நான் மங்குனி பாண்டியனா பண்ணும் போது அவர் வந்து அசோசியேட் டைரக்டர். எதாவது ஒரு கேரக்டர் பத்தி, டயலாக் பேசும்போது சூட்டிங்ல என்ன பேசிருப்போமோ அப்படித் தான் பேசுவாரு. நிறைய கேரக்டர் சொல்வாப்ல. பசங்க படம் பண்றதுக்கு முன்னாடியே ஒரு டெக்னீசியனா கதை கேட்கும்போது ஒவ்வொரு கேரக்டரும் பிடிக்கணும். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பிஹேவியர் இருக்கு. ஒரு பிரேமுக்குள்ள ஒரு பத்து பேரை ஸ்டேஜிங் பண்றது பெரிய வேலை.

Director Pandiraj
Director Pandiraj

கேமராமேன் டைரக்டரா பேச ஆரம்பிக்கும்போது ஒரு ஆக்டரா ஒரு எமோஷனலோட டிராவல் பண்ணிடுவோம். ஒரு டெக்னீசியனா சீனைக் கேட்கும்போது இதுல எத்தனை இடத்துல ஷாட் கட்டாகும்? எந்த ஷாட்டை எப்படி எடுக்கப் போறோம்? ஆர்ட்டிஸ்ட் பிளேஸ்மெண்ட் என்ன? பெரிய க்ரௌட வந்து பிரேமுக்குள்ள ஸ்டேஜிங் பண்றது வந்து பெரிய பெரிய வேலை.

கொஞ்சம் விட்டாச்சுன்னா அது வந்து ஸ்டேஜிங் லெவல் வந்துடும். நிஜ நாடகங்கள்ல வந்து எல்லாரும் ஒரே ஆங்கிள்ல இருப்பாங்க. அது ஒரே விஷன் தான். சினிமாவில அப்படி இல்ல. எங்க வேணாலும் மாத்திக்கலாம். அது வந்து சாதாரணமா தெரியும். ஆனா வெரி டிபிகல்ட் வந்து அதுதான்.

Ilavarasu
Ilavarasu

நிறைய கதைகள்ல டிராவல் ஆகி டெக்னீசியனா வரும்போது ஒரு ரிலே ரேஸ் மாதிரி. எல்லாத்துக்கும் வந்து ஒரே கேரக்டரைக் கொடுத்தீங்கன்னா அது எம்ஜியாரா இருந்தாலும், விஜயா இருந்தாலும், சூர்யா சாரா இருந்தாலும் யாரா இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல 2.15 மணி நேரம் ஒரு ஆளை வச்சி என்டர்டெயின்மெண்ட் பண்ண முடியாது.

ஒரு ஹீரோவ வச்சோ, ஒரு ஹீரோயின வச்சோ, இல்ல ஒரு காமெடியன வச்சோ என்டர்டெயின்மெண்ட் பண்ண முடியாது.

நாலு கேரக்டரோ, சில சப்போர்ட்டிங் கேரக்டரை வச்சோ தான் என்டர்டெயின்மெண்ட் பண்ண முடியும். அந்தக் குச்சி ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருத்தர் கையில இருக்கும். இது வந்து ஸ்ட்ராங்கான ஏரியா. அது பாண்டிராஜோட எல்லாப் படங்கள்லயும் பார்த்தீங்கன்னா அதை ரொம்ப ஆதாரமா வச்சிருப்பாரு.

எல்லாப் படங்களையும் பார்த்தீங்கன்னாவே கேரக்டர்ஸ் ப்ளே ஆகும். மையப்புள்ளியில உள்ள கேரக்டரைச் சுற்றி கோலம் போட்டுக்கிட்டே வருவாரு. அது போரடிக்காமப் போகும். அது வந்து சக்சஸா ஆகும். ஆனா அது வேலை செய்றது வந்து ரொம்ப ரொம்ப டிபிகல்ட். அதை சக்சஸா பார்ம் பண்ணிட்டு வாராரு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...