நேர்கொண்ட பார்வை பற்றி ஒரு நேர்கொண்ட பார்வை

1.பெண்களை உயர்வாக போற்றும் வகையில் அஜீத் நடித்த மிக மிக அருமையான கண்ணியமான நேர்மையான படம் என்று சொல்லலாம்.


2.யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு மாஸ் என்பது பெரும்பலம்.

3. பிங்க் படத்தை அப்படியே இயக்காமல் அஜீத் ரசிகர்களையும் கவர் செய்யணும் அதே நேரத்தில் சொல்ல வந்த மெசேஜை சொல்லணும் என அதற்கேற்ற வகையில் லாவகமான திரைக்கதை அமைத்திருக்கும் ஹெச் வினோத் பாராட்டுக்குரியவர்.

4. ஹெச் வினோத்தின் ஹாட்ரிக் வெற்றிப்படம் இது. தொடர்ந்து மூன்றாவது வெற்றிக்கனியை ஹெச் வினோத் சுவைத்து விட்டார்.

5. ரங்கராஜ் பாண்டே உட்பட பல பிரபலங்கள் இருப்பதும் இப்படத்தின் சிறப்பு.

6. இன்று வெளியாகி இருக்கும் இப்படம் நல்ல பாஸிட்டிவ் ரிவ்யூக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

7. பெண்களை பற்றி உயர்வாக சொல்லிய இப்படம் பெண்கள் மட்டுமல்லாது அனைவருமே ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்.

Published by
Staff

Recent Posts