காலம் கடந்தும் ஒலிக்கும் எம்.எஸ்.வி அய்யாவின் கிருஷ்ணகானம் ஆல்பம்

கடந்த 1977ம் ஆண்டு வெளியானது கிருஷ்ணகானம் ஆல்பம் பக்தி பாடல்களில் இது தனியிடத்தை பிடித்த பாடல்கள் ஆகும். மறைந்த இசைமாமேதை அய்யா எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.


இந்த ஆல்பத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். காலம் கடந்தும் இப்படத்தின் பாடல்கள் பேசப்படுகிறது . குறிப்பாக எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் பாடல் அதிகம் பேர் கேட்ட பக்தி பாடலாக இருக்கும்.

எஸ்.ஜானகி பாடிய கோகுலத்து பசுக்கள் எல்லாம் பாடலும் மிகவும் அதிகம் பேர் கேட்ட பாடலாக இருந்து வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேல் இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் மிக அதிக அளவில் புகழ்பெற்ற பாடலாகும்.

எம். எஸ் வி அவர்களே பாடி இருந்த அமர ஜீவிதம் ஸ்வாமி அமுதவாசகம் பாடல் மிக பெரிய அளவில் புகழ்பெற்ற பாடலாகும்.

Published by
Staff

Recent Posts