அனிதா இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின்: நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்


நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்த அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அனிதாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்

பாஜக-அதிமுக அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் முக ஸ்டாலின்
அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதாவின் பெயரில் உள்ள நூலகத்தில் முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய புத்தகங்கள், பல புதிய அனிதாக்களை உருவாக்கும் என்று உதயநிதி கூறியதை கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Published by
Staff

Recent Posts