இரண்டு விவசாயிகள் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த பிகில்!

cf685741e83b91ca6dc3b213ca9f5cfc

விஜய் நடித்த பிகில் திரைப்படம் பல பெண்களின் மன உறுதியை வளர்த்துள்ளதாகவும் குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளதாகவும் அவ்வபோது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

அந்த வகையில் தற்போது இரண்டு விவசாயிகளின் கடன்கள் அடைக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்ததும் பிகில் திரைப்படத்தால் தான் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது

தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்கள் பகுதில் உள்ள இரண்டு விவசாயிகள் வங்கியில் வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவதை கேள்விப்பட்டு ‘பிகில்’ வெற்றி விழாவை கொண்டாட வைத்திருந்த பணத்தால் அந்த விவசாயிகளின் கடை அடைத்துள்ளனர். இந்த இரண்டு விவசாயிகள் கடனை அடைத்ததே நாங்கள் கொண்டாடும் உண்மையான பிகில் வெற்றி என்றும் அந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் செய்தால் விவசாயிகள் கடனை அடைக்காமல் முடியாமல் தற்கொலை செய்து வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...