குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அப்பாவும் மகனும்

இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற பலர் வலியுறுத்தி வரும் நிலையில், கேரளாவில் பேரணியும் போராட்டமும் நடைபெற்றது.

fa0a2e1b2b951cfdfa69cf03d0c4b207

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியும் அவரது மகன் துல்கர் சல்மானும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். நேரடியாக குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி குறிப்பிடாமல் மறைமுகமாக தங்களது கருத்துக்களை சொல்லியுள்ளனர்.

சாதி, மதம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்தையும் கடந்து நாம் உயரும்போது வலிமையான தேசமாக மாற்றி காட்ட முடியும் ஒற்றுமையின் உத்வேகத்துக்கு எதிராக ஏதாவது இருந்தால், அது நம்பிக்கை இழக்கச் செய்யும்” என மம்முட்டிதெரிவித்துள்ளார் .

துல்கர் சல்மான் முகநூலில் பதிவிட்ட கருத்தில், “மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவை நமது பிறப்புரிமை. அதை அழிக்க எது வந்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...