‘பட்டாஸ்’ திரைவிமர்சனம்



தந்தை மகன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

தமிழகத்தில் அழிந்துபோன அடிமுறை என்ற தற்காப்புக் கலை எப்படி மீட்கப்பட்டு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது தான் இந்த படத்தின் சுருக்கமான கதை இந்த படத்தின் முக்கிய கதையை குறிப்பிட்டு விட்டால் படம் பார்ப்பதில் சுவாரசியம் போய்விடும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறோம்

தனுஷ் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தந்தை கேரக்டருக்காக மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை


மகன் கேரக்டர் ஒரு பக்கா மாஸ் கமர்சியல் கேரக்டர். மிகவும் ஜாலியான தனுஷ் ரசிகர்களுக்கு குஷிப்படுத்தவே உருவாக்கப்பட்ட கேரக்டர் போல் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் ரசிகர்களிடம் கைதட்டல் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகளில் பில்டப்புகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் தனுஷ் ரசிகர்களுக்கு ஏற்ற காட்சிகள் என்பதால் அதனை மறந்து விட்டு விடலாம்.

சினேகாவுக்கு மீண்டும் ஒரு சிறப்பான ரீஎண்ட்ரி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உணர்ந்து மிக மிக சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் குவியும் என்றும், கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை மறந்துவிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மிகச்சரியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். எனவே மீண்டும் தனுஷுடன் இணைந்து அவர் ஒரு வெற்றிப் படத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்

விவேக்-மெர்வின் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போடவைக்கும் உள்ள வகையில் உள்ளன குறிப்பாக சில்புரோ பாடலுக்கு திரையரங்கில் எழுந்து ஆட்டம் போடாதவர்களே இல்லை என்று கூறலாம் மொத்தத்தில் தனுஷின் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள பட்டாஸ் திரைப்படம் குடும்பத்துடன் சென்று ஜாலியாக ரசிக்கும் வகைகளான ஒரு திரைப்படம்

ரேட்டிங்: 4/5

Published by
Staff

Recent Posts