முதல் முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கும் சிம்பு: பிரபல இயக்குனர் தகவல்



சிம்பு நடிக்க இருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் தகவல்கள் இன்று மாலை அடுத்தடுத்து வெளியாகிய நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இதில் முதல் முறையாக சிம்பு ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த கேரக்டரின் பெயர் என்ன என்பது குறித்து சிம்புவின் பிறந்த நாளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த கேரக்டரின் பெயரை தேர்வு செய்ய ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், சரியான கேரக்டரின் பெயரை தெரிவிக்கும் நபர் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரு நாள் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Published by
Staff

Recent Posts