காயமடைந்து ரத்தம் சொட்டிய நிலையிலும் நடித்த அருண் விஜய்!


f5bc1b8c7350b8ad96dffc24ab413555

நடிகர் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சினம். இந்த படத்தை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேலன் என்பவர் இந்த படத்தில் அருண் விஜய் கொடுத்த ஒத்துழைப்பு குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சினம் படப்பிடிப்பின் ஒரு ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அருண்விஜய் காட்சியை நடித்துக் கொடுத்து விட்டுத்தான் முதலுதவி எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்

அருண்விஜய்யின் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஆகியவை அபாரமானது என்றும் அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு தகுதியானவர் என்றும் மேலும் கூறியுள்ளார். இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி என்ற நடிகை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சினம் படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் இந்த படத்தின் டிரைலர் அதிவிரைவில் வெளியாகும் என்றும் ஜி.என்.ஆர் குமாரவேலன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews