ராமராஜனுக்காகவே ஹிட் பாடல் கொடுத்த இசைஞானி

இளையராஜாவின் இசையில் பாடல் கேட்பது பலருக்கும் அலாதி சுகம் கேட்க கேட்க தெவிட்டாத இளையராஜாவின் மெட்டுக்களை காரிலோ, பஸ்ஸிலோ காதில் ஹெட் செட் மாட்டி கேட்டு செல்வது பலருக்கும் மிக பிடித்தமான செயல்.

206cc8f1ae6a275a317a529a56d9c2b9

இளையராஜா இசையமைத்த பாடல்கள் பல அவர் நடிகர்களுக்கென்று போடுவதில்லை இயக்குனர் சொல்லும் சிச்சுவேஷன் அடிப்படையில்தான் அந்த பாடல்களை அவர் இசையமைத்திருந்தார்.

ஆனால் நடிகர் மோகனுக்கும், ராமராஜனுக்கும் மட்டும் அது மிக ஸ்பெஷலாக அமைந்தன. சமீபத்தில் கூட ரஜினி தனக்கு நல்ல பாட்டு தரலை கமலுக்குத்தான் நல்ல பாட்டு போட்டிங்க என இளையராஜாவிடம் ஜாலியாக கேட்டதற்கு அப்டிலாம் சொல்லாதிங்க எல்லாருக்கும் நல்ல பாடல் போட்டிருக்கேன் ஏன் ராமராஜனுக்கு, மோகனுக்குலாம் கொடுத்ததில்லையா என கேட்டுள்ளார்.

எத்தனையோ நடிகர்களுக்கு இசைஞானி பாடல் போட்டிருந்தாலும் மோகன்,ராமராஜன் படங்களுக்கு போட்டிருக்கும் பாடல்களில் மட்டும் தனித்துவம் இருக்கும்.

பல அரிதான மெட்டுக்கள் எல்லாம் இவர்களின் படங்களுக்கு இசையமைத்தபோது இசைஞானிக்கு உதித்திருக்கும். இது தானாகவே அமைந்தது போல்தான் தெரிகிறது.

எப்படி மோகனுக்கும் ராமராஜனுக்கும் மட்டும் இசையமைக்கும்போது மட்டும் யதேச்சையாகவே இனிய மெட்டுக்கள் இசைஞானியின் மனதில் உதித்தது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

மதுரை மரிக்கொழுந்து வாசம், குடகு மலை காற்றிலொரு, நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே, மாலை கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே, கண்ணே என் கார்முகிலே, அரும்பாகி மொட்டாகி, யார் பாடும் பாடல் என்றாலும், கலைவாணியோ ராணியோ என , எத்தனை எத்தனை எண்ணற்ற இனிய பாடல்களை ராமராஜனுக்கு கொடுத்து இருக்கிறார் இசைஞானி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...