ஆடி அமாவாசை விரதம் இருப்பது ஏன்?

ஆடி அமாவாசை தினத்தன்று கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணைவார்கள். அன்றைய தினத்தில் நமது உடலில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவும் காணப்படும். பௌர்ணமி அன்று சூரியன் தாக்கம் அதிகமாகவும் காணப்படும். இதனை கடலின் அலை இயக்கத்தால் அறிந்து கொள்ளலாம். அமாவாசை தினத்தன்று கடல் அமைதியாக காட்சியளிக்கும். சந்திரன் சூரிய ஒளியை பெற்று பிரதிபலிக்கிறது. சூரிய ஒளியின் தாக்கத்தை சந்திரன் மூலமாக கடல் பெறுவது இல்லை.பௌர்ணமி தினத்தன்று சந்திரன் மிகவும் ஒளியை சூரியனில் இருந்து பெற்று பூமியை தாக்குகின்றது. அதனால் பௌர்ணமி தினத்தன்று கடல் அலைகளின் நீளம் மிக அதிகமாகி ஆர்ப்பரித்து கொண்டிருப்பதைக் காணலாம்.

அமாவாசை தினத்தன்று சூரிய ஒளியின் தாக்கம்  கடல் மீது இவ்வாறு இருக்கும் பொழுது, மற்ற ஜீவன்களில் மீது எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள். அமாவாசை தினத்தன்று உடலில் சக்தியும், இயக்கமும் குறைவாகவும், பௌர்ணமி தினத்தன்று அதிகமாக காணப்படும்.

மற்ற நாட்களை விட அமாவாசை தினத்தன்று உடலின் இயக்கம் குறைந்து காணப்படுவதால் உணவுகளை அதிகம் உண்ணக் கூடாது. அன்றைய தினத்தில் விரதம் இருந்து உடலை சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். அமாவாசை நாட்களில் தவம், மௌன விரதம் மேற்கொண்டால் உடல், மனம் இயக்கங்கள் சீராகி மனம் அமைதியை அடைந்து இறைநிலை எய்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.

Published by
Staff

Recent Posts