கொரோனா, இயற்கை அழிப்பு – இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரனின் வருத்தம்

சுந்தரபாண்டியன் படம் மூலம் அறிமுகமாகியவர் எஸ்.ஆர் பிரபாகரன். பின்பு கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவரின் கொம்பு வச்ச சிங்கமடா படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா பாதிப்புகள் முடிந்த உடன் தான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.


கொரோனா குறித்து இவரின் ஆதங்கத்தை தன் முகநூலில் கொட்டி தீர்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணன் தம்பியானாலும் சரி., பெற்ற அன்னையாலும் சரி., நான்கு அடி தள்ளித்தான் இருக்க வேண்டும்- இனி
என் அனுமதியின்றி யாரும் யாரையும் தொட்டு விளையாட முடியாது..! உங்கள் மனதிற்கு பிடித்தவரின் மரணம் என்றாலும்- கட்டி அழ முடியாது..!
உலகத்திலுள்ள உயிரினங்களிலேயே ஆறறிவு கொண்டு படைக்கப்பட்டது உன் இனம் என்பதால்., அகம்பாவம் கொண்டாய்.! உன்னை அழிக்க முடியாதவனாய், கற்பனை செய்து கொண்டாய்.! விளைவு- நீ வாழ பிற உயிரினங்களை வெட்டியும் சுட்டும் கூறு போட்டாய்.! பல்லாயிரம் கோடி மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் தாவரங்களையும் வேறோடு வெட்டி வீழ்த்தினாய்..! மலைகளை குடைந்தாய்., பாறைகளை உடைத்தாய்., நிலத்தினில் ஆழ்துளையிட்டாய்., கடலின் வளங்களை திருடினாய்..!
தன்னை பாதுகாக்கவும் பராமரிக்கவும் படைக்கபட்ட மனித இனம்., தனக்கே எமனாய் வளர்ந்து நிற்பதை., பொருத்து கொள்ள முடியாத இயற்கையே., ஆறறிவு கொண்ட உன்னை அழிக்க- உன் கண்களுக்கு அகப்படாத உருவில் என்னை படைத்தது.,-
நீ சுட்ட துப்பாக்கி தோட்டாவின் சத்ததிற்கு பயந்து., மரக்கிளைகளில் பதுங்கி கொண்ட பறவைகளைப்போல்., உன் கால்களை கடித்து விடாமலிருக்க., நீ ஊற்றிய ஒரு குவளை தண்ணீரால் உயிர் பயம் கொண்டு., ஓடி ஒழிந்து கொண்ட எரும்புகளைப் போல்.., இன்று- நீ உன் வீட்டிற்குள் உயிர்பயத்தோடு..!! -ஏ மனிதா.!? இன்னுமா புரியவில்லை வாழ்க்கை.? இன்னுமா – நீ அறியவில்லை உன் பிறப்பின் ரகசியம்.? இனியாவது புரிந்து கொள்., உன் மனிதத்தின் புனிதம்., இன்றிலிருந்தாவது துவங்கு., உன்னை படைத்த இயற்கையை பாதுகாக்கவும் பராமரிக்கவும்.,
– இனியும் இதை செய்ய ௺ தவறினால்., உன்னை முழுமையாக அழிக்க- பல்லாயிரம் கோடி உருவம் கொண்டு., மீண்டும் மீண்டும் வருவேன்.-

இவன்-:

எஸ். ஆர். பிரபாகரனின் எழுத்துகளின் வழியே

உன் ஆறறிவுக்கு எளிதில் அகப்படாத
“கொரோனா”

Published by
Staff

Recent Posts