இதுவரை வெளிவராத பின்னணி பாடகர் அருண்மொழியின் விரிவான நேர்காணல்

பின்னணி பாடகர் அருண்மொழியை பலருக்கு தெரிந்திருக்கும். 80களில் திரைக்கு வந்தவர். சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞரான இவர் இசைஞானி இளையராஜாவிடம் பல ஆண்டுகளாக வாசித்து வருகிறார்.


பாடல் எழுதுவது, புல்லாங்குழல் வாசிப்பது என பல்வேறு திறமைகளை கொண்ட அருண்மொழியின் இயற்பெயர் நெப்போலியன். கவிஞர் வாலியின் கூற்றுக்கிணங்க இசைஞானி இளையராஜா வைத்த பெயர்தான் அருண்மொழி.

இவர் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர் ஆவார். புல்லாங்குழல் வாசித்த இவரை இசைஞானி அவர்கள், உயர்ந்த உள்ளம் படத்தில் இடம்பெற்ற வந்தாள் மகாலெட்சுமியே என்ற பாடல் மூலம் குழலிசை கலைஞராக அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து இவரது குரல்வளத்தை கண்டு, சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற நான் என்பது நீயல்லவோ பாடல் மூலம் அறிமுகப்படுத்தினார்.

அதன் பின் நிறைய இனிமையான பாடல்களை பாடினாலும் இவரது முழுமையான நேர்காணல் என்பது இதுவரை எதிலும் வந்ததில்லை.

நேற்று வந்த பாடகர்கள் கூட அல்ட்ரா மாடர்னாக அடுத்த நாளே பேட்டி கொடுக்கும்போது, பல வருடம் பல இசை சாதனை செய்த இவரின் பேட்டி வராமல் இருந்தது வருத்தமே இப்போது அதை போக்கும் வகையில் முதல் முறையாக ஒரு யூ டியூப் சேனல் அவரின் விரிவான நேர்காணலை பதிவு செய்துள்ளது.

அந்த காணொளியின் லிங்க் இதோ.

Published by
Staff

Recent Posts