அஜீத் பிறந்த நாள் -வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

நேற்றைய தினம் நடிகர் அஜீத்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அஜீத்தின் தீவிரமான வெறித்தனமான ரசிகர்கள் அஜீத் பிறந்த நாளை நேற்று கொண்டாடி தீர்த்தனர். சில பிரபலங்களும் அஜீத்துக்கு வாழ்த்துக்களை பரிமாறினர்.


நடிகை ராதிகா பல வருடங்களுக்கு முன் அஜீத் நடித்து வெளிவந்த பவித்ரா படத்தில் நடித்தார் அந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொன்னார்.

அதே போல் நடிகர் அஜீத்தை வைத்து ராசி படத்தை இயக்கிய இயக்குனர் முரளி அப்பாஸும் அஜீத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார்.

அஜீத்தும் கமலும் தனக்கு கொடுத்த வாழ்வு என்ற வகையில் 1996 மே 1. நான் இயக்கிய முதல் படத்தின் அறிவிப்பு வந்த நாள். அஜித்தோடு துவங்கிய கலைப்பயணம், இன்று கலைஞானி நம்மவரோடு அரசியல் பயணமாக தொடர்கிறது. வழிதிறந்த அஜித்துக்கும் வாழ்வுதந்த நம்மவருக்கும் வணக்கம் என கூறியுள்ளார் அவர்.

இது போல பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Published by
Staff

Recent Posts