பிரதமர் பேச்சு- குஷ்பு, ஹெச். ராஜாவின் வலுக்கும் மோதல்கள்

நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பேசப்போகிறார் என்ற உடனேயே அதை கேலி செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டனர் சிலர்.

071e4b480cfc63c27ab9815b08f32c69

பிரதமர் பேசி முடித்ததும் நடிகை குஷ்பு ஒரு டுவிட் இட்டுள்ளார். அதில் போங்கடா என் சமையலையாவது சீக்கிரம் முடிச்சிருப்பேன் வீணாப்போச்சு என கூறியுள்ளார்.

இதை தங்க்லீசில் கூறியுள்ளார். இதை பார்த்த பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதலில் தமிழில் எழுத பழகுங்கள் நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில் தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை. என பதிலளித்துள்ளார்,

இதற்கு மீண்டும் பதிலளித்த குஷ்பு ஏன் உங்களுக்கு எரியுது நான் எங்கயாவது பிரதமர் பேர சொன்னனா என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews