பிறைச்சூடன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..


பாடல்

தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல
தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்
சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம்
ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே.

விளக்கம்..

மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய தேர்களாலே பொலிவு நிறையப்பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத் தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம். ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு.

Published by
Staff

Recent Posts