தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்


பாடல்..

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே

விளக்கம்..

இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கை தொழுது உய்க.

Published by
Staff

Recent Posts