இசைஞானி இளையராஜாவின் ட்ரம்மர் புருஷோத்தமன் மரணம்

இசைஞானி இளையராஜாவிடம் அந்தக்கால படங்களில் இருந்து பணியாற்றியவர் புருஷோத்தமன். ட்ரம்மரான இவர் நாம் கேட்கும் இளையராஜாவின் பாடல்களில் முக்கால்வாசி பாடல்கள் இவரது ட்ரம்ஸ் கைவண்ணத்தில் இருக்கும்.

ட்ரம்மர் மட்டுமல்லாது இசைஞானியுடன் நெருங்கிய நட்பில் 44 வருடங்களுக்கும் மேல் உள்ளவர்.

இசையை பற்றி அறிந்தவர். ஒரு பாடல் எப்படி வரவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இவர்.

சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள் என அந்தக்காலத்து படங்களில் இருந்து தற்போதுவரை வந்த இளையராஜாவின் படங்களில் பணியாற்றியுள்ளார்.


இளையராஜாவின் இசைக்கு ட்ரம்மர் புருஷோத்தமனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்தில் வரும் காட்சியானது நிழல்கள் படத்தில் வரும் மடைதிறந்து பாடும் நதி அலை நான் பாடலில் ட்ர்ம்ஸ் வாசிப்பவராக ஒரு காட்சியில் வருவார். அந்த காட்சி தான் இது

இவரை புரு என்றே சக கலைஞர்கள் அன்புடன் அழைப்பர். இவரது மறைவுக்கு இளையராஜாவிடம் பணியாற்றும் அனைத்து இசைக்கலைஞர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Staff

Recent Posts