தமிழின தல அஜித்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்


614aa006cba785b10df3b6f270ef685c-1

தமிழின தலைவர் என பலரை பொதுமக்கள் கூறி அழைத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தல அஜித்தை தமிழின தல’ என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கையும் உருவாக்கி உள்ளனர். இந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரண்ட் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் அவ்வப்போது தல குறித்த செய்திகளை டுவிட்டரில் பதிவு செய்து அதனை டிரெண்டாக்கி வருவது வழக்கமாக உள்ளது

அந்த வகையில் இன்று காலை முதல் தமிழின தல’ என்ற ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் எதற்காக டிரெண்ட் ஆகிறது என்று புரியாமலே விஜய் ரசிகர்கள் உள்பட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் குழப்பம் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஹேஷ்டேக் இதுவரை 797.8 ஆயிரம் பேர்கள் பார்வேர்டு செய்துள்ளதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.தமிழ் புரியாத பலர் இந்த ஹேஷ்டேக்கிற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.