இரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரி

வராஹி வழிபாடே கலியுகத்தில் அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து தீர்வு தரும் வழிபாடு. தமிழ்நாட்டில் பழமையான வராஹி கோவில்கள் குறைவு. உத்திரகோசமங்கை ஆதி வராஹி, தஞ்சாவூர் கோவில் வராஹி, பளூர் சொர்ணவராஹி என குறிப்பிட்ட கோவில்களே உள்ளன.


இவற்றில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி இரவு நேரத்தில் மட்டும் வராஹியாக அருள்பாலிக்கிறாள்.

தற்போதைய கலியுகத்தில் அநியாயங்கள் , அக்கிரமங்களை எதிர்ப்பவளாகவும் அநியாயக்காரர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் தெய்வம் வராஹி, பராசக்தியின் அம்சமான வராஹி சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பஞ்சமி திதியில் உதித்தவர்.

இரவு நேரத்தில்தான் வராஹி மிக அநியாயங்களை அழிக்க புறப்படுகிறாள் என்பது ஐதீகம்.திருவானைக்காவல் கோவிலில் மட்டும் இரவு நேரத்தில் வராஹியாக நினைத்து அம்பாளுக்கு பூஜை செய்யப்படுகிறது.

Published by
Staff

Recent Posts