பாம்பன் சுவாமிகள் முருகனை நேரில் கண்ட கோவில்

முருகனை நினைத்து பல பக்தி பாசுரங்களை எழுதியவர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த முருகனடியவர் பாம்பன் சுவாமிகள் இவர் சென்னை திருவான்மீயூரில் ஜீவசமாதியடைந்துள்ளார்.


சென்னையில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி மிகுந்த அதிர்வலைகளை உடையது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இங்கு சென்று வருவர்.

இங்கு உட்கார்ந்து முருகப்பெருமானையும் பாம்பன் சுவாமிகளையும் ஒரு சேர நினைத்து தியானம் செய்து வழிபடுவோர் ஏராளம். இந்த இடமே ஒரு இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாம்பன் சுவாமிகளின் முன்னோர்கள் இலங்கையை பூர்விகமாக கொண்டாலும் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் தான் வாழ்ந்தார்கள். சிறுவயது முதலே முருகப்பெருமான் மீது பக்தி கொண்ட பாம்பன் சுவாமிகள் பாம்பன் அருகில் உள்ள பிரப்பன் வலசையில் அடர்ந்த காட்டில் முருகனின் காட்சியை காண தவம் இருந்தார். இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் முருகனின் காட்சி அவருக்கு கிடைத்து விடவில்லை பல துன்பங்கள் அவருக்கு ஏற்பட்டன அதை எல்லாம் மீறி முருகனின் தரிசனம் வேண்டி இருந்தார். முடிவில் அவருக்கு முருகனின் தரிசனம் கிடைத்தது மயில் மீது முருகன் காட்சி கொடுத்ததாக வரலாறு. இது அந்தக்காலத்தில் புராணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கதை அல்ல , சில நூறு ஆண்டுகளுக்கு முன் கடந்த நூற்றாண்டில் நடந்த உண்மையான விசயம். பின்பு தனது ஊரிலிருந்து சென்னைக்கு சென்றார் அங்கு தம்பு செட்டி தெருவில் நடந்து சென்றபோது குதிரை வண்டி மோதி அவரின் கால்கள் பாதிக்கப்பட சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உள்ள மன்றோ வார்டில் தொடர்ந்து சண்முக கவசம் பாடினார் . அதனால் அங்கும் முருகன் அவருக்கு காட்சி கொடுத்து அவரின் உடல்நிலையை சரி செய்தார் என கூறப்படுகிறது. பின்பு அவர் சென்னையில் திருவான்மீயூரில் இருந்தபடியே 1929ம் ஆண்டு ஜீவசமாதியானார்.

அவர் இயற்றிய சண்முக கவசம் முக்கியமானது. நமக்கு ஏற்படும் கடும் துன்பங்களை போக்க கூடியதாகும்


இவரின் ஜீவசமாதி சென்னையில் இருப்பது போல இவர் முதன் முதலில் இவர் தவம் இருந்த இராமநாதபுரம் பிரப்பன் வலசையில் ஒரு கோவில் உள்ளது. இங்கு முருகன் அருள்பாலிக்கிறார். சித்ரா பவுர்ணமியன்று இங்கு மிகவும் விசேஷமாகும்.

இராமநாதபுரம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உச்சிப்புளி தாண்டி சென்றால் பிரப்பன் வலசை வரும். வலது பக்கம் உள்ள கோவில் வளைவுக்குள் உள் சென்றால் பாம்பன் சுவாமிகள் கோவிலை தரிசிக்கலாம்.

Published by
Staff

Recent Posts