சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்

சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை என்பது கோவில் நடையை அடைக்கும் முன்பாக இவ்வுலகத்தை காக்கும் பரம்பொருள் ஈசனுக்கும் இறைவியான பார்வதிக்கும் நடத்தப்படுவது.


கோவிலை அடைக்கும் முன்பாக இருவரின் சிலைகளையும் அங்குள்ள கோவில் தனி மண்டபத்தில் வைத்து மாணிக்க வாசகரின் பாடலை பாடி அங்குள்ள பொன்னூஞ்சலில் இறைவனையும் இறைவியையும் வைத்து பூஜை அர்ச்சகர்கள் பூஜை செய்வர்.

எல்லாருக்கும் மூலப்பொருளான அப்பாவான ஈசனையும் அம்மாவான பார்வதியையும் நாம் சந்தோஷத்துடன் இது போல கவனித்தாலே அவன் மனம் மகிழ்ந்து உலக மக்களாகிய அவன் பிள்ளைகளை நன்றாக வைப்பான் என்பது நம்பிக்கை.

இன்று அரசு மற்றும் தனியார் சார்ந்த கோவில்களில் அதிக வருமானம் வரும் கோவில்கள், பிரசித்தி பெற்றபெரிய சிவன் கோவில்கள் மட்டுமே இது போல பூஜைகள் நடக்கிறது.

பல பிரசித்தி பெற்ற பழமையான கோவில்கள் பலவற்றை மக்களுக்கு தெரியாது. கும்பகோணம், தஞ்சாவூர் பக்கம் கூட இது போல அதிகம் வெளியில் தெரியாத பஸ் வசதி கூட இல்லாத பல அடர்ந்த கிராமங்களில் புராணத்தோடு தொடர்புடைய தொன்மையான கோவில்கள் உள்ளன. பல கோவில்கள் வெளி உலகத்துக்கே இன்னும் தெரியாமல் உள்ளது. இது போக ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சிலர் ஒன்று சேர்ந்து புதிதாக கோவில் கட்டி பராமரித்தாலும் அர்த்தஜாம பூஜைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பழமையான சில கோவில்களில் நிதி இல்லாத காரணத்தால் ஒரு வேளை பூஜைக்கே மிகவும் கஷ்டமாக உள்ளது.

இது போல பல கோவில்களில் அர்த்தஜாமபூஜை எனப்படும் இரவு கடைசி பூஜையை சரி வர செய்யாமல் இருப்பதுதான் தற்போதைய அதிகமான விவாகரத்துக்கள்,பலருக்கும் காலம் கடந்தும் திருமணம் நடக்காமல் இருப்பது,இப்படி நமது பாரத பண்பாடான திருமணங்கள் வேறு மாதிரியாக போய்விட்டதற்க்கு முக்கியகாரணமாக சொல்லப்படுகிறது.

அதனால் உங்கள் ஊரில் இது போல் பழமையான புதுமையான சிவன் கோவில்கள் இருந்தால் அவற்றில் பூஜைகள் நடக்காமல் இருந்தால் ஒரு கமிட்டி அமைத்து ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி நிதி வசூல் செய்து இது போல பூஜைகளை முறையாக செய்தால் உலகெங்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

திருமணத்தடைகள், குழந்தையின்மை, மழையின்மை என தற்போதைய நவீன காலத்தை வாட்டிக்கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

Published by
Staff

Recent Posts