அகத்தியர் அருள் புரியும் மனதுக்கு இதமான ஆன்மிகம் கமழும் பொதிகை மலை

பொதிலை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்ற பாடலை திருவிளையாடல் படத்தில் கேட்டிருப்பீர்கள். ஒரு கவிஞன் மனதுக்கு உடலுக்கு சுகமான காற்றை மற்ற இடங்களில் இருந்து எடுத்து சொல்வதை விட்டு பொதிகை மலையை உவமையாக சொல்லி அங்கிருந்து புறப்படும் தென்றல் என எழுதி இருக்கிறார் அப்படி என்றால் அந்த மலையின் சிறப்புகளை பாருங்கள்.


பொதிகை மலைதான் அகத்தியர் வாசம் செய்யும் ஒரு மலையாக கருதப்படுகிறது. இதன் ஒருபகுதி கேரளாவோடும் பாதி தமிழ்நாட்டின் நெல்லை , தென்காசி மாவட்டங்களோடும் சேர்ந்து உள்ளது. குற்றாலம், பாபநாசம், மற்றும் கேரளாவின் சில பகுதிகள்தான் பொதிகை மலையாக சொல்லப்படுகிறது.

பாவங்கள் தீர்க்கும் பாபநாசம் , இங்குதான் இறைவனும் இறைவியும் அகத்தியர் தன் திருமணத்தை பார்க்க முடியவில்லை என இந்த மலையில் அகத்தியருக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு.

இங்கு மலையில் உற்பத்தியாகி வரும் தாமிரபரணி நதிதான் புண்ணிய நதியாக இம்மாவட்ட மக்களால் பாவிக்கப்படுகிறது.

பாபநாசத்தில் தாமிரபரணியில் குளித்து இங்குள்ள பாபவிநாசரையும் அம்மனையும் வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

மலையில் புண்ணிய அருவியாக அகத்தியர் அருவி, பாணதீர்த்தம், உள்ளது சொறிமுத்தையனார் கோவில் உள்ளது. புண்ணிய மலையான இங்கு பெளர்ணமி அன்று சில பகுதிகளில் சந்தன மழை பொழிவது ஆச்சரியமான விசயம்.

இதை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சில வருடங்களுக்கு முன் ஒரு அமானுஷ்ய நிகழ்ச்சிக்காக படம் பிடித்து இருந்தது.

இந்த பொதிகை மலையில்தான் அகத்தியர் மழை உள்ளது அங்கு அவருக்கு கோவில் உள்ளது. இங்கு சென்று வருவது கடினமான விசயமாகும் முறைப்படி கேரள அரசின் அனுமதி வாங்கி செல்ல வேண்டும்.

கேரளத்தின் வழி டிரெக்கிங்

கேரளமாநிலம் திருவனந்தபுரம் வழியாக இம்மலையை அடைவது சற்று சுலபம் என்றாலும், அந்த அளவுக்கு சுலபம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

வருடத்தில் ஒரே ஒரு முறை

ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் சீசன் வருகிறது. அப்போது கேரள வனத்துறை இந்த மலையில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கிறது. அதுவும் சுலபமாக அல்ல. அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது.

மழை மற்றும் வனவிலங்குகள்

மழைக்காலம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மற்ற நேரங்களில் இதுபோன்ற பயணங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.

Published by
Staff

Recent Posts