கோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் செல்லும் பஸ்கள், வாகனங்கள் சிலசரியாக ஒரு 8 கிமீ தூரத்தில் நின்று செல்லும், காரணம் அந்த நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது.


சாலையில் இருந்து சிறிது தூரம் உள்ளே நடந்து சென்றால் அடர்ந்த கானகத்துக்குள் இந்த முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

வேண்டுவனவற்றை அருளும் இந்த முனீஸ்வரர் கோவிலில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலோனோர் வணங்காமல் கடக்க மாட்டார்கள்.

அனைத்து சுபகாரியங்களுக்கு செல்லும் முன்பும் இந்த முனீஸ்வரரை வணங்கியே செல்வர் இப்பகுதி மக்கள்.

சென்னையின் பாடிகாட் முனீஸ்வரர் போல, மதுரையின் பாண்டி முனீஸ்வரர் போல இந்த முனீஸ்வரரை தனியார் பேருந்து ஓட்டுனர்கள் காலையில் இங்கு நிறுத்தி சிதறு தேங்காய் உடைத்துதான் செல்வார்கள்.

இந்த சங்கரபதி கோட்டையானது பல வருடங்களாக உள்ளது. சுதந்திர காலத்தில் மருதுபாண்டியர்கள் சம்பந்தப்பட்ட கோட்டை இது.

மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டு ஊமைத்துரை உட்பட பலர் அடைக்கலமாகி இருந்த கோட்டை இது.

மருதுபாண்டியர் காலத்தில் இருந்தே இக்கோட்டையை காவல் காப்பவராக இந்த சங்கரபதி முனீஸ்வரர் இருக்கிறார்.

நேர்த்திக்கடன் வைத்திருப்போர் அதிகம் சேவல்களை நேர்ந்து விடுகின்றனர் சேவல்கள் அனைத்தும் இந்த முனீஸ்வரர் கோவிலிலேயே அடைக்கலமாகி இருக்கின்றன.

Published by
Staff

Recent Posts