பீடை மாதமா மார்கழி மாதம்?!


bab86bba141058a765aeb91e3350635b

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடகாலம் என்பது தேவர்களைப் பொறுத்தவரை  ஒருநாள்.  அந்தவகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே! (1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தைமாதம் முதல் ஆனிமாதம்வரை வருகின்ற ஆறுமாதக்காலம் தேவர்களுக்கு பகல்பொழுது.  இந்தக் காலத்துக்கு உத்தராயணம் என பெயர். ஆடிமாதம் முதல் மார்கழிமாதம்வரை வருகின்ற ஆறுமாதக்காலம்  தேவர்களுக்கு இரவுப்பொழுது. இந்தக்காலத்துக்கு தட்சிணாயணம் எனப்பெயர்.  தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி,  அதாவது, தேவர்களை  பொறுத்தவரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என கணக்கிட்டு சொல்கிறார்கள்.  இந்த காரணத்தினால்தான் தேவர்களை வரவேற்கும் விதமாக மார்கழி மாசத்து அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமா வச்சிருக்காங்க. 

bb8e1c66b251a9509bd044d319773426ஜோதிடரீதியா சொல்லனும்ன்னா  மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ ன்னு  வடமொழியிலும்,  மார்கழின்னு தமிழிலும் சொல்றோம்.  இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில்  பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் நம்மில் பலபேருக்கு தெரியாது. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்றவர். மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அவர், தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நமக்கு தெரியும்தானே?! மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும்.   அதன்னாலதான் நினைத்தது நிறைவேற, எதிரிகள் தொல்லை நீங்க  ம்ருத்யுஞ்ஜய ஹோமம் த்தை மட்டும் மார்கழிக்குன்னு காத்திருந்து செய்வாங்க. 

3030a417ae5812d7da94a4a7e45f84ba

மார்கழி மாதம் பீடை மாதம்ன்னு சொல்றாங்க. ஆனா, அது அப்படி இல்லை. வீடு உள்ளிட்ட சகல செல்வமும்  நாம் பெற்று நம் வாழ்வில் பீடு நடைப்போட உதவும் மாதம் என்பதால் இதுக்கு பீடுடைய மாதம் என பெயர்.   காலப்போக்கில் அது மருவி பீடை மாதமாகிவிட்டது. பீடுன்னா உயரிய, சிறந்த, உன்னதமான..எனப்பொருள். இறைவனை வழிபட்டால், வாழ்வின் உன்னத நிலைக்கு செல்லலாம்ன்னு இதற்கு பொருள். இந்த மாசத்தில் கரும்பு, நெல், மஞ்சள், காய்கறிகள்ன்னு அறுவடைக்காலம். வயல்ல அறுவடையை கவனிக்கவும்,  விளைந்த விளைப்பொருட்களை பக்குவப்படுத்தி, மூட்டையாக்கி விற்பனைக்கு அனுப்பவுமே சரியாய் இருக்கும். அப்படி இருக்க, மாமன் மச்சான் வீடுகளின் விசேசங்களில் கலந்துக்க முடியாதில்லையா?! அதுமில்லாம, இந்த மாசம் முழுக்க அனுமன் ஜெயந்தி, ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் திருக்கல்யாணம் என நிறைய ஆன்மீக விழாக்கள் வருவதாலும்தான் இந்த மாதத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகளை தவிர்க்கப்பட்டது.  அறுவடை முடிந்தபின் கிடைக்கும் கால இடைவெளியில் சுபநிகழ்ச்சி நடத்த பணம் வேணுமே! அதை சேர்க்கவும்தான் இந்த மாசத்தில் எதும் சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை.  நிகழ்ச்சிகளை  நடத்தக்கூடாதே தவிர அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.   அதாவது, பஜனை, கோவிலுக்கு செல்லும்போது தன் வீட்டு பிள்ளைகளுக்கு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்கவும்தான் அதிகாலையில் ஆண்கள் பஜனை செய்வதும், பெண்கள் கோவிலுக்கும் போவதும். ஏன்னா, பெண்பிள்ளைகள் இந்தக்காலம் மாதிரி அந்தக்காலத்தில் வெளிவருவதில்லையே!

அதனால் இனியாவது பீடைமாசம்ன்னு மார்கழியை ஒதுக்க வேண்டாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews