கிரகப்பிரவேசத்தின்போது செய்யப்படும் சடங்குகள்

613cb7b2cbb6d740f47f422ded78298f

வீடு கட்டி முடித்து வீட்டிற்குள் குடி புகுவதற்குமுன் நடத்தப்படும் விழாதான் கிரகப்பிரவேசம். கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்ப்பது அவசியம். நமது பண்டைய நூல்களில் மூன்று வகையான கிரக பிரவேசங்கள் வகைப்படுத்தி இருக்கின்றார்கள். அவை அபூர்வ, சபூர்வ, த்வந்த்வ என வகைப்படும். இப்போது அவற்றைப் பற்றியும், கிரக பிரவேசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பார்ப்போம்.

அபூர்வ கிரகப்பிரவேசம்

காலி மனை வாங்கி அந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டிற்குள் புகுவது அபூர்வ கிரக பிரவேசம்.

சபூர்வ கிரகப்பிரவேசம்

ஏற்கனவே கட்டப்பட்டு குடியிருந்த வீட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி, சிறிது கால இடைவெளியில் மீண்டும் அதே வீட்டுக்கு குடிப்புகுவது சபூர்வ கிரக பிரவேசம்.

த்வந்த்வ

புனரமைப்பு அல்லது வெள்ளம், நெருப்பு, பூகம்ப சேதம் போன்றவற்றிற்கு பின் சீரமைத்த வீட்டிற்குள் குடி புகுவது த்வந்த்வா (பழைய) கிரக பிரவேசம் எனப்படும். அபூர்வ கிரக பிரவேசத்தை பொறுத்தவரை, சரியான முகூர்த்த நேரம், பின்பற்றப்பட வேண்டும். சபூர்வ மற்றும் த்வந்த்வ கிரக பிரவேசங்களுக்கு பஞ்சாங்கத்தின் புனிதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

d9bae0750e9685a182eaabdacea808e3-1

மங்கள நேரம் அல்லது முகூர்த்தம்

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் நுழையும் நாளில் சூரியன் உத்தராய நிலையில் இருத்தல் வேண்டும். பழைய அல்லது புனரமைத்த வீடுகளில் நுழையும் போது குரு (வியாழன்) அல்லது சுக்கிரன் இருக்கவேண்டும். நட்சத்திர தோசம் கிரகப்பிரவேசத்திற்கு கிடையாது

b360234bf611cc59db74cd00702badc0

வாஸ்து பூஜை

வீட்டிற்கு குடிப்புகும் முன்னே, வாஸ்து பூஜையானது வீட்டிற்கு வெளியே வாஸ்து தேவதைக்கு நடத்தப்பட வேண்டும். ஒரு செம்பு பானை, நீர், நவதானியம் மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களால் நிரப்பப்பட்டிருக்கும். அந்த பானையின்மேல் தேங்காயானது வைக்கப்படும். தேங்காயை சிவப்பு துணியால் மூடப்பட்டு, சிவப்பு நூலால் கட்டப்படும். பூசாரி பூஜைகளை முடித்தபின் கணவன் மற்றும் மனைவி இருவரையும் ஒன்றாக சேர்ந்து அந்த பானையை எடுத்து ஹோமத்திற்கு (சடங்கு தீ) அருகில் வைக்க செய்வார்.

வாஸ்து சாந்தி

வாஸ்து சாந்தி அல்லது கிரக சாந்தி என்பது ஹோமத்தை உள்ளடக்கும். தீய தாக்கங்களையும், எதிர்மறையான அதிர்வுகளையும் தடுத்து அமைதியான சூழலை உருவாக்க ஹோமம் நடத்தப்படுகிறது. அனைத்து பூஜைகளும் முடிந்த பின் பூசாரிக்கு விருந்து வழங்கப்படுகிறது. அவரது சேவை மற்றும் வாழ்த்துக்களுக்காக அவருக்கு சில தக்ஷணை அல்லது கட்டணங்கள் வழங்கப்படும். கணபதி பூஜை, லக்ஷ்மி பூஜை மற்றும் சத்யநாராயண பூஜை போன்ற பூஜைகளும் பூசாரியின் பரிந்துரையின்படி செய்யப்படும்.

கோ பூஜை.. பசுவை வீட்டினுள் அழைத்தல்..

8af601bb98ead77024d06ad8385e9df2

பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை “கோமாதா’ என அழைக்கிறோம். இதன் காலடிப்பட்ட இடத்தில் மங்களம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்று இல்லாமல் பசுவை தனித்து அழைத்து செல்லவோ, பூஜை செய்யவோ கூடாது

6afa909fca44cfd23c36384b8f234dd0

கிரகபிரவேசத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

வீட்டின் கதவுகள் பொருத்துதல், கூரை வேய்தல், வாஸ்து கடவுளை வணங்குதல், பலி செலுத்துதல் மற்றும் பூசாரிக்கு விருந்து கொடுத்தல் போன்றவற்றிற்குமுன் கிரகப்பிரவேசம் செய்வது சரியில்லை.

வீட்டில் கர்ப்பிணிகள் இருக்கும் போது கிரகபிரவேசம் நடத்தக் கூடாது.

c0b0ac2532b2deee6f1af17d247f659f-1

அன்னதானம், வஸ்திர தானம் செய்யாத கிரகப்பிரவேசமும் முழுமை பெறுவதில்லை. அன்னை, தந்தை கலந்துக்கொள்ளாததும் பலன் தராது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews