நாளை ஸ்ரீ ராமநவமி- துன்பம் ஒழிந்து இன்பம் பிறக்க ராமரிடம் வேண்டுங்கள்

இராமாயணம் என்ற பெருங்காவியத்தின் நாயகனாக வருபவர் ஸ்ரீராமர். கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தின் ஒன்றாக ராமவதாரம் கருதப்படுகிறது. நல்லவர்களுக்கு அடையாளமாக இவ்வுலகில் குறிப்பிடப்படுபவர் ஸ்ரீராமபிரான். தீமையை ஒழிக்க ஸ்ரீராமர் பூமியில் பிறந்தார் இப்பூமியில் கடவுள் அவதாரமாக இவர் அவதரித்தாலும் மனிதனாக பிறந்து விட்டதால் மனிதன் படும் கடும் துன்பங்களை எல்லாம் இவர் அனுபவித்திருக்கிறார். மனிதனாக பிறந்துவிட்டால் கடும் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்க வேண்டும் என்பது கடவுள் மனிதனாக அவதரித்த ஸ்ரீராமருக்கே பொருந்துகிறது.


ஸ்ரீராமனின் பிறந்த நாள் நாளை வருகிறது. ஸ்ரீராமனின் பிறந்த நாளையே ஸ்ரீராமநவமியாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் முக்கிய ராமர் கோவில்களில் எப்போதும் விழா களை கட்டும்.இந்த முறை அதற்கு வாய்ப்பில்லாத நிலை கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

அதனால் இம்முறை ஸ்ரீராமநவமியை வீட்டிலேயே ராமபிரானின் படத்தை அலங்கரித்து வைத்து ஏதாவது ஸ்வாமிக்கு இனிப்பு பொருள் நிவேதனம் செய்து ஸ்ரீராமனின் பக்தி பாசுரங்களை பாடி அவரை வழிபடுங்கள்.

ஸ்ரீராமரை புருவத்தில் நிறுத்தி மனமுருக சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். தற்போதுள்ள கொடூர சூழ்நிலை விலக வேண்டும், அமைதி நிலவ வேண்டும் கோவிட் 19 வைரஸிலிருந்து உலக மக்களை காக்க வேண்டும் என்று மனதார ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் வேண்டுங்கள்.

விரைவில் இப்பூமியை நல்ல நிலைக்கு கொண்டு வருவார்.

Published by
Staff

Recent Posts