மாந்த்ரீகம், மனநிலை சரியில்லாதோருக்காக நடைபெறும் சோட்டானிக்கரை குருதி பூஜை

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது சோட்டானிக்கரை இந்த கோவில் உருவானது பற்றி இரண்டு தினங்களுக்கு முன் நம் ஆன்மிகம் பகுதியில் கூறி இருந்தோம்.

0ce2b07843d24e3a6ac5728273a51747

இந்த கோவிலில் மனநிலை பாதித்தோர், பில்லி சூனியம், பேய்பிடித்தோர் அதிகம் வருவர். இவர்கள் பகவதி அம்மனை வேண்டிக்கொள்வர்.

இவர்களுக்காக இங்கு நடைபெறும் குருதி பூஜை மிகவும் விசேஷம் இதில் பல மன நலம் பாதித்ததாக பேய் பிடித்தாக கூறப்படும் நபர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்படுபவர்கள் இதில் கலந்து கொள்ளும்போது உக்கிரமாக ஆடுவர்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலின் பிரச்சித்தி பெற்ற பூஜைகளில் ஒன்று தான் குருதிபூஜையாகும். இந்த கோவிலின் கீழ்காவில் நடைபெறும் குருதிபூஜையில் பக்தர்கள் பெருமளவு கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்று செல்கிறார்கள்.

முன்பு இங்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே குருதிபூஜை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த பூஜை ஒவ்வொரு நாளும் நடத்தப்படுவது சிறப்பாகும். இதில் கலந்து கொண்டால் இப்படியானவர்களுக்கு மன நோய், மாந்த்ரீக பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews