கொரோனா நீங்க நடந்த பனை ஓலை வழிபாடு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நீங்க கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அடைக்கப்பட்டாலும் அங்கிருக்கும், கோவில் குருக்கள், இமாம்கள், ஃபாதர்கள் என ஆலயங்களை நிர்வகிப்பவர்கள் சிறப்பு வழிபாடுகளை மக்கள் கூட்டம் இல்லாமல் தனியாக நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அகிலாண்டேஸ்வரி ஞானேஸ்வரர் கோவிலில் பனை ஓலையில் எழுதி கொரோனா நீங்க பிரார்த்தனை செய்து அதை எரித்து பஸ்பமாக்கி நீரில் கரைப்பது வழிபாடு.

இரண்டு பிரதோஷங்களாக இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் மே மாதம் 5ம் தேதி நடக்கும் பிரதோசத்திலும் இம்முறை கடைபிடிக்குமாம்.

உலகில் கொடிய நிகழ்வுகள் நடக்கும் சமயத்தில் பனை ஓலையில் இது போல எழுதி அதை சுவாமியிடம் பிரார்த்தித்து அந்த ஓலையை பஸ்பமாக்கி நீர் நிலைகளில் கரைத்தால் இக்கோவிலில் இருக்கும் நடைமுறையாம்.

அந்த நடைமுறையே தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

Published by
Staff

Recent Posts