ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்

பல பள்ளிகளில் ஆசிரியர் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் பல மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அதை படிப்பதில்லை. சில ஆசிரியைகள் படிக்கும் முறையை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்லி தருகிறார்கள்.


அப்படியான ஒரு ஆசிரியைதான் புவனேஸ்வரி. இவர் கற்பிக்கும் முறைக்காகவே இவரிடம் மாணவ மாணவிகள் விரும்பி பயில்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்கள் மூலம் இந்த ஆசிரியை மிகவும் பிரபலமானார்.

இயற்கை முறை விவசாயத்தை விரும்பும் புவனேஸ்வரி தான் மட்டுமல்லாது அதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறார்.

பல கிடைக்காத பாரம்பரிய விதைகளை சேகரித்து வைத்திருக்கும் இவர் தனது மாணவ மாணவிகளுக்கு அதை கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும் வேறு வேறு விதைகளை மாணவ மாணவிகளுக்கு கொடுத்து அதை வீட்டில் வளர்க்க சொல்கிறார்.

அதில் ஒரு காயோ பழமோ ஆசிரியைக்கு கொடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார். மாணவ மாணவிகள் சிறு வயதல்லவா இந்த வயதில் இது போல விசயங்களை ஆர்வமாக செய்வார்கள் விவசாயம் வளரும் நாடு செழிக்கும் என்ற அடிப்படையில் அதை சொல்லி கொடுக்கிறார்.

மேலும் இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் பயிற்சி அளிக்கிறார். இவர் மாணவ மாணவிகளுக்கு கரும்பலகையில் கணக்கு பாடம் எடுத்த அழகே மிகவும் சிறப்பாக இருந்தது. சில நாட்களுக்கு முன் வைரலாக வாட்ஸப், பேஸ்புக் , டுவிட்டர் போன்றவற்றில் இந்த வீடியோ பரவி இந்த ஆசிரியரை உலகறிய செய்தது.

அன்பாக எளிமையாக இவர் சொல்லிக்கொடுத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.  இவர், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையிலுள்ள கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இவரது அன்பான எளிமையான ஆசிரியப்பணியை பல தன்னார்வ அமைப்புகள் பாராட்டி இவருக்கு சிறந்த ஆசிரியைக்கான விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளது.

Published by
Staff

Recent Posts