பன்முகத்துவம் கொண்ட கோலாகலமான தீபாவளி!!!!

மேற்குநாடுகளில் இங்கு இருப்பது போன்றே தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. பெரும்பாலும் இது  இந்துக்களுக்கான பண்டிகை என்பதைத் தாண்டி, பல வகையான இனத்தவரும், மதத்தவரும், நாட்டினரும் கொண்டாடும் பல இனங்களின் திருவிழாவே இந்த தீபாவளி ஆகும்.

தீபாவளி என்பது இந்தியாவினைத் தாண்டி நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா  போன்ற

நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தினைப் போன்றே மலேசியா, சிங்கப்பூரில் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


மதங்களைப் பொறுத்தவரை இது பெரும்பாலும் இந்துக்களுக்கான பண்டிகையாகவே உள்ளது. இருப்பினும் பெரும்பான்மையாக இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சீக்கியர்களைப் பொறுத்தவரை, 1577 ஆம் ஆண்டு, பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கிய நாளை சீக்கியர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

சமணர்களைப் பொறுத்தவரை, மகாவீரர் நிர்வாணம் அடைந்த அந்தநாளை  நினைவு தினமாக கொண்டாடும் வகையில் சமணர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறையில் எவ்வித மாற்றங்களும் இல்லை, அவரவர் வசதிக்கு ஏற்ப எளிதானது முதல், விமரிசையாக வரை கொண்டாடுவர்.

Published by
Staff

Recent Posts